- நான்தான் சர்க்கரையையே சேர்த்துக்கொள்வதில்லையே!
- தொடர்ந்து நடைப்பயிற்சி செய்கிறேனே?
- உணவுக் கட்டுப்பாட்டை தீவிரமாகக் கடைப்பிடிக்கிறேனே,
- வேப்பிலைக் கொழுந்து, குறிஞ்சாக்கீரை, நாவல்பழக் கொட்டைப்பொடி, பாகற்காய் ஆகியவற்றைத் தினமும் சாப்பிடுகிறேனே!
மெல் சொன்னபடி நிறையப் பேர் குழம்பி இருப்பார்கள். யாருக்கு இன்சுலின் அவசியம்? என்று பார்ப்போம்.
- முதல் வகைச் சர்க்கரை நோய் உள்ளவர்கள்- முதல் வகைச் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குப் பிறவியிலேயே இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்கள்
கணையத்தில் இல்லாது இருப்பதால் கணையம் இன்சுலினைச் சுரக்காது. ஆகையினால் இன்சுலினைத் தேவையான அளவு போட்டுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை
- இரண்டாம் வகைச் சர்க்கரை நோயாளிகளுக்கு மாத்திரையானது சர்க்கரையைக் குறைக்க முடியாத நிலை ஏற்படும்போது- இரண்டாம் வகை நீரிழிவு நோயில் பீட்டா செல்களின் இன்சுலின் சுரக்கும் சக்தி குறையும் மற்றும் பீட்டா செல்களின் எண்ணிக்கையும் குறைய ஆரம்பிக்கும்.
- அவசர நோய் சிகிச்சையின் போது இரத்த சர்க்கரை அளவானது அதிகம் இருந்தால் இன்சுலின் போட்டுக் குறைக்க வேண்டும்.
- சர்க்கரை நோயினால் உடலில் உள்ள பல உறுப்புகள் செயலிழக்க ஆரம்பிக்கும். சிறுநீரகங்க்கள் பாதிப்பு ஏற்பட்டால் இன்சுலின் போட வேண்டி வரும்.
- சர்க்கரை நோய் உள்ள பெண் கர்ப்பம் தரித்தால் இன்சுலின் மூலம் சர்க்கரையைக் குறைக்க வேண்டும்.
- இருதய அறுவை சிகிச்சையின்போது. அதன் பிறகும் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டுவர.
- கண்ணுக்கு லேசர் அறுவை செய்துகொண்ட சர்க்கரை நோயாளிகளுக்கு.
- பத்து வருடங்களுக்கு மேல் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பொதுவாக மாத்திரைகளால் சர்க்கரையை குறைக்க இயலாது என்பதால்!]