ஆறுமாதத்துக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடலாமா?
- போடுவதில்லை.குழந்தைகளை நோய் தாக்காமல் பாதுகாப்பாக வைத்திருத்தல் அவசியம். கர்ப்பிணித் தாய்க்கு அளிக்கப்படும் தடுப்பூசியே பிறக்கும் குழந்தைக்குப் போதும்.
பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்ட தாய் பாலூட்டலாமா?
- பாலூட்டலாம். தாய்க்குப் போடும் தடுப்பூசி அவருக்கு வரும் நோயிலிருந்து காப்பதுடன் தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கும் தடுப்பாற்றல் கிடைக்கிறது.
தாய்க்கு பன்றிக்காய்ச்சல் வந்தால் பாலூட்டலாமா?
- தாய்க்கு பன்றிக்காய்ச்சல் வந்தால் தாயின் உடலில் அதற்கான எதிர்ப்பு ஆன்டிபாடிகளை உருவாக்கும். தாய்ப்பாலில் அந்த ஆன்டிபாடிகள் மட்டுமே இருக்கும். நோய்க்கிருமி வைரஸ் இருக்காது. ஆகையினால் தாய் நோயுற்றிருந்தாலும் பாலை சுத்தமான முறையில் சேகரித்து பாட்டிலின் மூலம் கொடுக்கலாம்.
பன்றிக்காய்ச்சல் நோய்க்கு மருந்து சாப்பிடும்போது தாய்ப்பால் கொடுக்கலாமா?
- தாய் நோயால் பாதிக்கப்பட்டால் குழந்தையை அவர் இருமுதல்,தும்முதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும். ஏனெனில் அவற்றின் மூலம் நோய் பரவலாம். ஆகையினால் தாயின் பாலை சேகரித்துக் கொடுக்கலாம்.
குழந்தைக்குப் பன்றிக்காய்ச்சல் வந்தால் தாய்ப்பால் கொடுக்கலாமா?
- குழந்தைக்கு பன்றிக்காய்ச்சல் வந்திருந்தாலும் தாய்ப்பால் கொடுக்கலாம். எந்த நிலையிலும் தாய்ப்பாலைப்போலச் சிறந்த உணவு குழந்தைக்கு வேறெதுவும் இல்லை!.
Thank you for visited me, Have a question ? Contact on : me@nisanthu.com or skype : nisanthans
Please leave your comment below. Thank you and hope you enjoyed...