அனைத்து பக்கங்களும் சரியாகத் தெரிகிறதா என்ற சந்தேகம்
இருக்கும் இதற்காக நாம் ஒவ்வொரு பக்கமாக சென்று சொடுக்கி
பார்க்க வேண்டாம் ஒரே நிமிடத்தில் நம் இணையதளத்தின்
முகவரிகள் அனைத்தும் வேலை செய்கிறதா என்று சரி பார்க்கலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
இணையதள வடிவமைப்பாளர்கள் முதல் இணையதளம் வைத்து
இருப்பவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் பொதுவான
சந்தேகம் நம் இணையதளத்தின் எல்லா பக்கங்களும் வேலை
செய்கிறதா என்ற கேள்வி இருக்கும். முழு இணையதளத்தை
உருவாக்குபவருக்கு அதில் ஒவ்வொரு பக்கமாக சென்று
எல்லா இணைப்பும் சரியாக வேலை செய்கிறதா என்று பார்க்க
நேரம் கிடைப்பதில்லை இந்த சிறிய வேலைக்கு உதவ ஒரு
இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://validator.w3.org/checklink/

படம் 2
கட்டத்திற்குள் நம் இணையதள முகவரியை கொடுக்க வேண்டும்.
அடுத்து நமக்கு தேவையான ஆப்சன்-ஐ தேர்ந்தெடுத்து விட்டு
Check என்ற பொத்தானை அழுத்த வேண்டும். ஒரு சில
நிமிடங்களில் நாம் கொடுத்திருக்கும் இணையதளத்தின்
அத்தனை லிங் (Link)-ம் வேலை செய்கிறதா அல்லது
எத்தனை லிங் சரியாக இல்லை என்று அடுத்தப் பக்கத்தில்
அதன் முகவரியுடன் காட்டும். ( படம் 2 -ல் காட்டப்பட்டுள்ளது)
இணையதளத்தை புதிதாக வடிமைக்கும் நபர்களுக்கு
இந்ததளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.