தினமும் நம் உடலில் புதிது புதிதாக தோன்றும் சிறு நோய்கள்
இதற்காக மருத்துவமனைக்கு ஒட வேண்டாம் வீட்டில் இருந்தபடியே
மருத்துவரிடம் நம் நோய்க்கான பிரச்சினையைச் சொல்லி தீர்வு
காணலாம். இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
உணவகமும் மருத்துவமனையும் எல்லா நாடுகளிலும் அதிகரித்து
வருகின்றன இருந்தும் எல்லா மருத்துவமனைகளிலும் கூட்டம்
குறைந்தபாடில்லை அந்த அளவிற்கு மக்களுக்கு நோய் ஒரு
நண்பனாகவே மாறி உள்ளன. சிறிய தலைவலி முதல் காய்ச்சல்
வரை அத்தனைக்கும் மருத்துவமனைக்கு செல்வதை குறைக்க
நமக்கு உதவுவதற்காக இணையத்தில் ஒரு மருத்துவர் உள்ளார்.
இவரிடம் நமக்கு இருக்கும் பிரச்சினைகளை தெளிவாக கூறினால்
உடனடியாக மருந்தும் கூறுவார்.
இணையதள முகவரி : http://symptoms.webmd.com/symptomchecker
இந்தத்தளத்திற்கு சென்று நாம் நோயின் அறிகுறியை கூறினால் போதும்
உடனடியாக தீர்வு. உதாரணமாக நமக்கு தலைவலி என்று வைத்துக்
கொள்வோம் இங்கு சென்று தலைவலி என்று கூறியவுடன் எந்த
நோய் இருந்தால் தலைவலி வரும் என்று ஒரு பெரிய பட்டியலே
கொடுக்கிறது. அதிலும் குறிப்பாக ஒற்றை தலைவலி என்று கூறினால்
இன்னும் சுருக்கப்பட்டு என்ன நோயாக இருக்கலாம் என்று
கூறுகிறது. நோயின் பெயரைக் கூறி தீர்வு தேடலாம். எந்த பயனாளர்
கணக்கும் தேவையில்லை உடனடியாக நோயைப்பற்றி விரிவாக
அறிந்து கொள்ளலாம். மருத்துவத்துறையில் இருக்கும் நம்
நண்பர்களுக்கும் பொதுமக்களுக்கும் இந்தப் பதிவு பயனுள்ளதாக
இருக்கும்.
Timernisanthu
please wait...
நம் உடல் வியாதிகளுக்கு தீர்வு சொல்ல இலவச மருத்துவர் இருக்கிறார்.
Thank you for visited me, Have a question ? Contact on : me@nisanthu.com or skype : nisanthans
Please leave your comment below. Thank you and hope you enjoyed...
Please leave your comment below. Thank you and hope you enjoyed...
