இன்சுலின் பம்பின் வசதி என்னவென்றால் தினமும் பலமுறை ஊசி குத்திக்கொள்ள வேண்டியது இல்லை. இதனை வயிற்றுப் பகுதியில் சுலபமாக பொருத்திக் கொள்ளலாம் . கருவி சிறிய செல்போன் போல் இருக்கும். அதனால் துணியில் பொருத்திக்கொள்ளலாம். வெளியே தெரியாது. அதே போல் வீட்டுக்கு வராமல் வெளியிடங்களில் இருந்தால் அடிக்கடி மருந்து எடுத்துப் போட்டுக் கொள்ள வேண்டிய தேவை இல்லை. உடலில் எவ்வளவு சர்க்கரை உள்ளது என்று பார்த்து தேவையான அளவு எவ்வளவு என்று கருவியே கணக்கிட்டு விடும்.
யாருக்கு இது தேவை?
- முதல் வகை நீரிழிவு நோய் உள்ளோருக்கு
- சிறுநீரகம்,நரம்பு,கண், கால் பாதிப்புகள் உள்ளவர்களுக்கு
- நீரிழிவு நோயின் பின் விளைவுகள் உள்ளவர்களுக்கு
- சாதாரண சிகிச்சை மூலம் சர்க்கரையின் அளவு குறையாதவர்களுக்கு
- நீண்ட நாள் சர்க்கரை உள்ளவர்களுக்கு
- கர்ப்பிணிகளுக்கு
- காரணமின்றி சர்க்கரை குறைவதும் அதிகரிப்பதுமாக உள்ளவர்களுக்கு
- சர்க்கரையின் அளவு இரத்தத்தில் குறைந்து சரியான அளவுக்கு வரும்
- தாழ்நிலை சர்க்கரை ஏற்பட்டு மயங்கி விழுவது சீராகும்
- இரவில் தூக்கத்தில் சர்க்கரை குறைந்து விடுமோ என்று பயமின்றி உறங்கலாம்
- சரியான நேரத்தில் சாப்பிட முடியாதபடி பிசியாக வேலை செய்வோர் சற்று ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் முன்போ பின்போ உண்ணலாம்
- வாழ்க்கைத் தரம் உயரும்.
சரி! இவ்வளவு அருமையான இந்தக் கருவியை நாம் உபயோகிக்க முடியுமா?
முடியும். ஆனால் இக்கருவியின் விலை பதினைந்து லட்ச ரூபாய். மாதம் இரண்டு ஆயிரம் ரூபாய் மருந்துக்கு செலவாகும்.