உடலில் நீர்ச்சத்து போதுமான அளவு இருப்பது நாம் சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கு மிக அவசியம். உலகின் மொத்தப் பரப்பில் ௭௦ சதவீதம் நீர் இருப்பது போல் உடலில் 7௦% நீர் உள்ளது. உடலில் நீரானது உடலின் அனைத்து செயல்களுக்கும் மிக அவசியம்.
- சராசரி மனித உடலில் ௩௭ லிட்டர் தண்ணீர் உள்ளது
- இரத்தத்தில் 83% தண்ணீர் உள்ளது.
- மூளை 75% நீராலானது.
- எலும்பில் 25% நீர் உள்ளது.
- மூச்சு விடுவதின் மூலம் தினமும் 25௦ மில்லி நீர் உடலிலிருந்து வெளியேறுகிறது.
- சாதாரணமாக 2 லிட்டர்கள் / அல்லது 2 குவளை நீர் ஒரு நாளைக்குத் தேவைப்படுகிறது.
- அதிக உடல் உழைப்பு உள்ளோருக்கு இது போல் இரண்டு அல்லது மூன்று மடங்கு தேவைப்படலாம்.
- நீர் அருந்தினால் பசி குறைகிறது. இதனால் உடலானது சேமித்து வைத்துள்ள கொழுப்பை எரித்து உடலியக்கத்திற்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்துகொள்கிறது.
- உடல் கொழுப்பைக் குறைப்பதற்கு எல்லா மருந்துகளையும் விட நீர் மிகச் சிறந்தது.
நீர் உடலில் குறைவதை எப்படி அறிவது?
- நாக்கு மற்றும் வாய் உலர்ந்து போகுதல்
- சிறுநீர் மஞ்சளாகப் போதல்
- மலம் கட்டுதல் - உடலில் போதுமான நீர் இருந்தால் பெருங்குடலில் மலம் எளிதாக செல்லும். உடலில் நீர்ச்சத்துக் குறையும்போது பெருங்குடல் மலத்திலுள்ள நீர் முழுவதையும் உறிஞ்சிக் கொள்ளும். வெளியே விடாது. அதனால் மலம் இறுகி மலச்சிக்கல் ஏற்படும்.
- தோலின் விரிந்து சுருங்கும் தன்மை குறையும். நீர்ச்சத்து போதுமான அளவு உள்ளோரின் தோலை இழுத்து விட்டால் தோல் பழைய நிலைக்கு உடனே திரும்பிவிடும். குசந்தைகளுக்கு வயிற்றுப் போக்கின்போது மருத்துவர்கள் வயிற்றுத் தோலை இழுத்துப் பார்ப்பார்கள். நீர்ச்சத்துக் குறைவாக இருந்தால் தோல் பழைய நிலைக்குத்திரும்புவதற்கு நேரமாகும்.
- நெஞ்சுப் படபடப்பு - பொதுவாக உடலில் தேவையான அளவு நீர் இருந்தால்தான் இரத்தத்திலும் சரியான விகிதத்தில் நீர் இருக்கும். இது குறையும்போது இரத்தத்திலுள்ள தாது உப்புக்கள் மாறுபடுவதால் இதயத்துடிப்பு அதிகரிக்கும்.
- தசைப்பிடிப்பு - தசை சரியாக இயங்க சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகள் சரியான அளவு இருக்க வேண்டும். ஆனால் உடலில் நீர்ச்சத்துக் குறையும்போது இந்த தாது உப்புக்களின் அளவும் மாறுபடுகிறது. அதனால் தசைகள் பிடிப்பு,சுளுக்கு போன்றவை ஏற்படுகின்றது. இது பெரும்பாலும் நீர் அருந்தாமல் நீண்ட நேரம் கடின வேலை செய்வோருக்கும், நீண்ட தூரம் நீர் அருந்தாமல் ஓடுதல், விளையாடுதல் ஆகியவற்றில் ஈடுபடுவோருக்கும் ஏற்படும்.
- மயக்கம், கிறுகிறுப்பு
- சோர்வு - நீரின் அளவு இரத்தத்தில் குறைவதால் இரத்த அழுத்தம் குறைந்து , இரத்தத்தில் பிராணவாயு குறைந்து விடுவதால் தசை, நரம்புகள் செயல்பாடு குறைந்து சோர்வு ஏற்படுகிறது.
- நீர்சத்துக் குறைந்தால் உடல் வெப்பம் அதிகரிக்கும். இதனால் வேர்வை சுரப்பது குறையும்.
தண்ணீர் தேவையான அளவு குடிப்பது உடல் நலனுக்கு மிகவும் அவசியம். போதுமான அளவு தண்ணீர் குடித்து உடல் நலம் காப்போம்.
Thank you for visited me, Have a question ? Contact on : me@nisanthu.com or skype : nisanthans
Please leave your comment below. Thank you and hope you enjoyed...