அண்ணன் சூர்யா ஏர்செல்லின் அம்பாசிடர், தம்பி கார்த்தியை அம்பாசிடராக ஒப்பந்தம் செய்திருப்பது ஏர்செல்லின் வியாபார பகையாளி ஏர்டெல். இனி ஏர்டெல்லின் விளம்பரங்களில் கார்த்திதான் ஏர்டெல்லை உபயோகிக்கும்படி வற்புறுத்தவிருக்கிறார். இனிமே கார்த்தி ஏர்டெல்லுக்கு வக்காலத்து வாங்குவார். இந்த புதிய வியாபார ஒப்பந்தம் தமிழ் உணர்வாளர்களை ரொம்பவே காயப்படுத்தியிருக்கிறது. ஈழப்போர் நடந்த நேரம் இலங்கை இனப்படுகொலை அரசுக்கு ஏர்டெல் சாதகமாக இருந்ததாகவும், அதன் படுகொலைகளை மறைக்க உதவியதாகவும் தமிழ் உணர்வாளர்கள் ஏற்கனவே ஏர்டெல் மீது குற்றம் சுமத்தியிருக்கிறார்கள்.
ஏர்டெல்லை புறக்கணிக்கும் விதமாக நூற்றுக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் தங்களது ஏர்டெல் கனெக்சனை திரும்பக் கொடுத்த நிகழ்வும் தமிழகத்தில் நடந்துள்ளது. ஏர்டெல்லுக்கு எதிரான போராட்டத்தை அவர்கள் மேலும் வலுவடையச் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
நீங்க எவ்வளவு வேணா சொல்லுங்க நாங்க அப்படித்தான் என்பது போல் ஐபா விவகாரத்தில் விவேக் ஓபராய்க்கு எதிராக போராட்டம் வெடித்த போது இலங்கை விவகாரம் ஒரு செத்து போன விஷயம் என்று தன்னுடைய “நிஜ” த்தை மக்களுக்கு சொன்னவர் நிஜ நடிகர் சூர்யா. இவரின் வார்த்தைகள் தமிழர்களையும் உணர்வாளர்களையும் எவ்வளவு காயப்படுத்தி இருக்கும் என்பதை இவர் அறிய மாட்டார், அது அவருக்கு தேவையும் இல்லை, இவருக்கு தேவையானதெல்லாம் தமிழர்களின் பாக்கெட்டில் இருக்கும் பணம் மட்டுமே. அதை அவரின் சமீபத்திய செயல்பாடுகள் நமக்கு பட்டவர்த்தமாகவே வெளிகாட்டி வருகிறது.
தமிழ் சினிமாவில் சிவாஜிக்கு பிறகு பெரிய ஓபனிங் படம் கொடுத்தவர் கார்த்தி, ஆனால் இவருக்கு இவ்ளோ பெரிய ஓப்பனிங்க் கொடுத்த அமீரை இவர்கள் பணத்திற்காக கோர்ட்க்கு நடையாய் நடக்க வைப்பது இவர்களின் நன்றிக்கு ஒரு எடுத்துக்காட்டு.
நிஜ வாழ்க்கையிலும் மீடியாக்களில் நல்ல நடிகராக நடித்த அவரின் முகமூடி கிழிந்துவிட்டது என்று ஊடகவியாளர் மத்தியில் கருத்து பலமாக அடிப்படுகிறது. தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கும் நடிகராக சூர்யா மாறிவிட்டார். அகரம் பவுண்டேசன் என்று ஆரம்பித்தார் அதன் செயல்பாடுகள் என்று பார்த்தால் பெரிதாக ஒன்றுமில்லை என்றும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
கம்யூட்டர் டேபிள் வாங்கியது, மவுஸ் வாங்கியது என்ற அளவிலேயே அகரம் செயல்பாடுகள் இருக்கிறதாகஅங்கு பணிபுரியும் வாலன்டரியர் ஒருவர் தெரிவித்த்தார். அதேவேளையில் நான்கு வருடங்களாக சூர்யா வருமானவரி கட்டாமல் டிமிக்கி கொடுத்தார் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். உறுதியாக இது நன்றாக நடிகர் சிவகுமாருக்கும் தெரிந்து இருக்கும்.
இந்நிலையில் தொடர்ந்து பணத்துக்காக ஈழ மக்களை காயப்படுத்திக்கொண்டு வரும் சிவகுமார குடும்பத்திலிருந்து வந்த கார்த்தி ஏர்டெல்லின் புதிய அம்பாசிடராக பொறுப்பேற்றுக் கொண்டது ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் மேலும்மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பணத்துக்காகவா இப்படி?
Timernisanthu
please wait...
தமிழினத்திற்கு எதிராக நிஜ நடிகர் சூர்யா குடும்பம்
Thank you for visited me, Have a question ? Contact on : me@nisanthu.com or skype : nisanthans
Please leave your comment below. Thank you and hope you enjoyed...
Please leave your comment below. Thank you and hope you enjoyed...

