எச்சரிக்கை: இந்த இடுகை ஹாரர் படங்களை ரசிப்பவர்களுக்கானது. இதைப்பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் மற்றவர்கள் படிக்கலாம் படித்துவிட்டு திட்டக்கூடாது என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்


SAW படம் பற்றி
பாதிக்கப்பட்ட ஒருவன் அதில் சம்பந்தப்பட்டவர்களை கொடூரமான முறையில் தண்டனை கொடுத்து கொள்வதே இந்தப்படத்தின் துவக்கமாகும். இது வரை 6 பாகம் வெளிவந்துள்ளது தற்போது இந்தப்படத்தின் 7 ம் பாகம் 3 D யில் வரப்போகிறது. இதன் முதல் பாகம் யாரும் எதிர்பாராத வண்ணம் மாபெரும் வெற்றி பெற்று பெரும் வசூல் சாதனை செய்தது. ருசி கண்ட பூனையாக அந்த படத்தின் தயாரிப்பாளர்களும், இது வரை பல கதிகலங்க வைக்கும் ஹாரர் படங்களை தயாரித்தவர்களுமான Lion Gates நிறுவனத்தினர் மேலும் பல பாகங்களை தயாரித்து வெளியிட்டனர். இதில் ஒரு சில பெரும் வெற்றியும் ஒரு சில அவ்வளவாக ரசிகர்களை கவராமலும் போனது. இருப்பினும் இதற்கு பெரும் ரசிகர் கூட்டம் என்னைப்போல உண்டு

பாகத்தை நீடிக்க வேண்டும் என்று எப்படியோ சொதப்பி கதையே புரிந்துகொள்ள முடியாத படி செய்து விட்டார்கள். இருந்தாலும் இதில் வரும் தண்டனைகள் மிகத்திறமையாக வடிவமைக்கப்பட்டு இருப்பதால் அதை பார்க்கவே பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள் கதையே பலருக்கு என்னவென்றே புரிந்து இருக்காது அவ்வளவு குழப்பம். நான் அனைத்து பாகத்தையும் பார்த்து விட்டேன்… முதல் பாகம் தவிர (அதுவே அரைகுறை தான்) மற்ற எந்த பாகமும் புரியவில்லை இருந்தாலும் இன்னும் அடுத்த பாகத்தை ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன். Saw என்றால் பார்த்தது என்று அர்த்தம் இருப்பது போல SAW என்றால் அறுப்பது என்ற ஒரு அர்த்தமும் உண்டு என்பதை அறிவீர்கள் தானே! படத்தின் பெயர்க்காரணம் புரிந்ததா!

தண்டனைகள்
இதில் கொடுக்கப்படும் தொழில்நுட்பமான தண்டனைகளை இளகிய மனம் படைத்தவர்கள் கண்டிப்பாகப் பார்க்கவே முடியாது. அந்த அளவிற்கு படு பயங்கரமாக இருக்கும். இதைப்போல தண்டனைகளை எல்லாம் எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்று எனக்கு செம ஆச்சர்யமாக இருக்கிறது எனக்கு மட்டுமல்ல படம் பார்க்கும் எவருக்கும் இருக்கும்.

ஒரு எடுத்துக்காட்டு
ஒரு பெண்ணுக்கு இரும்புக் கொக்கிகளால் ஆன உடை அணிவிக்கப்பட்டு இருக்கும் அதை திறப்பதற்கான சாவி ஒரு அமில பாட்டிலில் இருக்கும். ஒரு நிமிட அவகாசம் தான் அதற்குள் அமிலத்தில் கையைவிட்டு சாவியை எடுத்துத் திறக்க வேண்டும் இல்லை என்றால் உடல் பிய்த்தெரியப்படும். அமிலத்தில் கையை விட்டாலே கை காலி இதில் கீழே உள்ள சாவியை எடுத்துத் திறக்க வேண்டும் முதல் கொஞ்ச வினாடிகள் பயந்து யோசித்து பின் வேறு வழியில்லாமல் கஷ்டப்பட்டு சாவியை எடுத்து திறப்பதற்குள் நேரம் ஒரு நிமிடத்தை கடந்து விடும். அந்தப்பெண்ணின் உடலும் பிய்த்தெரியப்படும்.
இதில் இரண்டு விஷயம் ஒன்று அந்த நபர் தப்பிக்க வாய்ப்பே இல்லாமல் இருக்கும் இருந்தாலும் முயற்சி செய்கிறேன் என்று ஒருமுறை தண்டனை அனுபவிப்பார். இதற்காகவே இவர்கள் தயாரித்துள்ள இயந்திரங்களின் தொழில்நுட்பம் மலைக்க வைக்கிறது. நிஜமாகவே ரூம் போட்டு யோசிக்கறாங்க போல இருக்கு!
இரண்டாவது ஒரு நிமிடம் முடிந்த பிறகு அந்த இயந்திரம் தனது வேலையைக் காட்ட ஆரம்பித்து விடும். ஒரே நபர் அவர் கையால் ஒருமுறை, இயந்திரம் மூலம் ஒருமுறை என்று இருமுறை தண்டனை அனுபவிப்பார்.


சைக்கோ
ஹாரர் படம் என்றாலே அதை பிடிக்காதவர்களின் கருத்து படம் எடுப்பவர் மற்றும் அதை பார்ப்பவர்கள் ஒரு சைக்கோ என்பதாகும். இந்தப்படம் எடுத்த இயக்குனரும் இந்தக் குற்றச்சாட்டில் இருந்து தப்பவில்லை. இந்தப்படத்தின் அனைத்து பாகங்களையும் இயக்கியது ஒரே இயக்குனர் இல்லை. பொதுவாக ரசனை என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஒருவருக்கு காமெடி படம் என்றால் மற்றவருக்கு சண்டைப் படம், சோகப்படம், ராஜா காலத்துப்படம், த்ரில்லர் படம் மற்றும் வன்முறைப் படம் என்று பட்டியல் நீளும். அதே போல தான் ஹாரர் படமும். ஹாரர் படம் பார்ப்பதால் யாரும் திட்டம் போட்டு ஒருத்தரை அறுத்துக்கொண்டு இருப்பதில்லை
இருப்பினும் இதைப்போல படங்கள் உளவியல் ரீதியாக ஒருவரின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கு. எனக்கு இதுவரை அந்த மாதிரி எதுவும் இல்லை.. எனவே பயப்பட வேண்டாம்
எனக்கு பிடிக்காத வகைப் படங்களே இல்லை எனலாம் அனைத்து வகைப்படங்களையும் ரசித்து பார்ப்பேன். அதில் த்ரில்லர், ஹாரர் மற்றும் வன்முறைப் படங்கள் அதிகம் பிடிக்கும்.




நான் முதன் முதலில் பார்த்து பயந்த படம் என்றால் இயக்குனர் Eli Roth இயக்கிய “ஹாஸ்டல்” படமாகும் (அதற்கு முன் சிறு வயதில் மோகன் நடித்த “உருவம்” படம்) Saw படத்துக்குக்கூட நான் அதிகம் பயப்படவில்லை ஆனால் ஹாஸ்டல் படு பயங்கரமான ஹாரர் படம் என்னைப் பொறுத்தவரை. இந்தப்படத்தின் அதி தீவிர ரசிகன். இந்தப்படத்தைப் பற்றி இரண்டு வருடம் முன்பே விமர்சனம் எழுதி உள்ளேன். விருப்பமிருந்தால் படித்துப் பார்க்கவும். இது வரை அதிக பின்னூட்டங்கள் பெற்ற பதிவும் இது தான் என்று நினைக்கிறேன்

குலை நடுங்க வைத்த “Hostel” – திரைவிமர்சனம்
Saw படம் 7 ம் பாகம் வெளியீடு
சும்மா பயமுறுத்தி இவர்களுக்கு போர் அடித்து விட்டதோ என்னவோ! இந்த முறை ரணகளப்படுத்த ஹாரர் படத்தை 3D யில் கொடுக்க முடிவு செய்து விட்டார்கள். சும்மா பார்த்தாலே பீதி கிளப்பும் இதில் 3D யில் பார்த்தால்… அடி! தூள். இந்தப்படம் தான் SAW சீரிஸ் ன் கடைசிப் படம் என்று கூறப்படுகிறது
வரும் 2010 October 29 ம் தேதி மிகப்பெரிய அளவில் வெளியிடுகிறார்கள். இதற்காகப் படத்தை அனைத்து நாடுகளிலும் விளம்பரப்படுத்தி வருகிறார்கள். Get ready folks

