இப்போது ஜிமெயிலில் நேரடியாகத் தமிழில் அரட்டை அடிக்கலாம். கூகிள் இந்தியா இதற்கான வசதியை செய்து வழங்கியுள்ளது. இவ்வாறு அரட்டை அடிப்பதற்கு முதலில் en2ta.translit@bot.talk.google.com
எனும் முகவரியை உங்கள் தொடர்பாக சேர்த்துக்கொள்ளுங்கள்.

பின்னர் உங்களுக்கு அரட்டை அடிக்க விருப்பமான நண்பரை அரட்டைக்கு அழையுங்கள். பின்னர் அந்த அரட்டையை குழு அரட்டை ஆக்குங்கள். அந்த குழு அரட்டைக்கு en2ta.translit@bot.talk.google.com ஐயும் அழையுங்கள். இப்போ ஆங்கிலத்தில் தட்டச்சிட தட்டச்சிட தமிழில் இந்த பாட் உங்களுக்கு மாற்றிக்காட்டும்.
இதில் இருக்கிற பிரைச்சனை என்ன வென்றால் இரண்டு தடவை நாங்கள் தட்டச்சிடுவது மீள மீள வருது. உதாரணமாக நான் amma என்று தட்டச்சிட்டா அங்கே amma, அம்மா இரண்டையும் காட்டுது. இதை விரைவில் திருத்துவார்கள் என்று நம்புவோம்